மரணம் 
செய்திகள்

தொப்பூர் அருகே லாரி டிரைவர் மர்ம மரணம்

தொப்பூர் அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

தர்மபுரி:

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள பூனாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை பொட்டனேரியில் இருந்து சூரத்திற்கு இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் தொப்பூர் அருகே சென்றபோது உடல்நிலை சரியில்லாததால் பழனிச்சாமி வணிக வரி அலுவலகம் அருகே சர்வீஸ் ரோட்டில் லாரியை நிறுத்தினார். பின்னர் லாரி உரிமையாளருக்கு பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், இரண்டு லாரி டிரைவர்களை துணைக்கு அனுப்புமாறும் கூறினார். 

இதனைத் தொடர்ந்து பழனிச்சாமிக்கு மேலும் உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் பழனிச்சாமி உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.