நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் இருந்து இன்று அதிகாலை சிமெண்ட் மூடைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை அரியலூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 41) என்பவர் ஓட்டிவந்தார். தோவாளை அருகே வந்தபோது நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய் மொழிக்கு லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை நெல்லை மாவட்டம் மாவடி பகுதியை சேர்ந்த கோபால் (49) என்பவர் ஓட்டி வந்தார்.
எதிர்பாராதவிதமாக இந்த 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் டிரைவர் கோபாலுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews