செய்திகள்

கோவையில் லாரி மோதி லோடு ஆட்டோ டிரைவர் பலி

கோவையில் லாரி மோதிய விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர்.

மாலை மலர்

கோவை:

அன்னூர் அருகே உள்ள குப்பனூரை சேர்ந்தவர் சின்ராஜ். சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள விசுவாச புரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் சின்ராஜ் தவறி கீழே விழுந்தார். அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சின்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். 

இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் ஈரோடு மரப்பாலத்தை சேர்ந்த ராஜலிங்கத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.