பாஜக நிறுவனருக்கு மரியாதை செலுத்தும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 
செய்திகள்

பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள்- பாராளுமன்றத்தில் சபாநாயகர் மரியாதை

பாஜக நிறுவனரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாராளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு சபாநாயகர் மரியாதை செலுத்தினார்.

பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த திருவுருவப்படத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா மரியாதை செலுத்தி வணங்கினார்.