செய்திகள்

மும்பையில் புறநகர் ரெயில் தடம் புரண்டது: பயணிகள் தப்பினர்

எல்பின்ஸ்டன் நிலயத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 23 பேர் உயிரிழந்த நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இன்று புறநகர் ரெயில் தடம் புரண்டது

மும்பை தெற்கு பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து பக்கத்து மாவட்டமான ரய்காட்டில் உள்ள கர்ஜத் நகருக்கு செல்லும் சிறப்பு ரெயில் வழக்கம் போல் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் புறப்பட்டு சென்றது. ஐந்தாவது நடைமேடையில் இருந்து நகர்ந்து சென்ற அந்த ரெயில் பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் தடம் புரண்டது.

அதிர்ஷ்டவசமாக ரெயிலின் வேகம் மிக குறைவாக இருந்ததால் உள்ளே இருந்த பயணிகள் சுமார் 60 பேர் காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.