குழம்பில் இருந்த பல்லி 
செய்திகள்

பொன்னேரியில் ஓட்டலில் வாங்கிய குழம்பில் பல்லி - போலீசில் புகார்

பொன்னேரியில் ஓட்டலில் வாங்கிய குழம்பில் பல்லி இருப்பது தெரிய வந்ததையடுத்து, சையத் சுல்தான் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரி நண்பர்கள் தெருவைச் சேர்ந்தவர் சையத் சுல்தான். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு ஓட்டலில் தோசை, சட்னி மற்றும் குழம்பு வாங்கினார். பின்னர் மனைவியுடன் சாப்பிடும்போது குழம்பில் பல்லி இருப்பது தெரியவந்தது. உடனடியாக மனைவியை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.

பொன்னேரி போலீசிலும் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.