பெங்களூரு:
நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடக்கோரி உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் மதுக்கடைகள் நாளை முதல் மூடப்பட இருக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர்களில் மது விற்பனை செய்யக் கூடாது என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நடத்துவதற்கான உரிமம் இன்று நள்ளிரவோடு நிறைவு பெறுகிறது.
பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் ஏராளமான மதுக்கடைகள், உயர் ரக மதுபான விடுதிகள் இயங்கி வருகின்றன. பெங்களூரு முழுக்க மது விற்பனை பிரபலமாக இருப்பதோடு மாவட்டத்தின் மிக முக்கிய வியாபாரகங்களில் ஒன்றாக இருக்கிறது.
பெங்களூரு முழுக்க 94 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 700 மது விற்பனை மையங்கள் அமைந்துள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பெரும்பாலான கிளப்கள், உயர் ரக மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் மது விற்பனைக்கு தடை செய்யப்பட இருக்கிறது.
மொத்தத்தில் மாநிலம் முழுக்க நெடுஞ்சாலைகளின் 500 மீட்டர் பரப்பளவில் மொத்தம் 6000 மதுக்கடைகள் அமைந்துள்ளன.