பீர் 
செய்திகள்

புதுவையில் மதுபான விலை உயர்வு

புதுவையில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் மதுபான வகைகள், பீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை அரசின் கலால்துறை மதுபானங்களுக்கு கலால்வரி, கூடுதல் கலால்வரி உள்ளிட்ட வரிகளை நிர்ணயிக்கிறது.

சமீபத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலால் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 24-ந்தேதி வெளியானது.

இதன்படி புதுவையில் மதுபான வகைகள், பீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த, சாதாரண ரக மதுபானங்களுக்கு குவார்ட்டருக்கு ரூ.2 முதல் ரூ.12.50 வரையிலும், நடுத்தர, உயர்தர மதுபானங்களுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல கலால் வரி உயர்த்தப்பட்டதால் பீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.10 வரை பீர் விலை உயர்கிறது.

ஏற்கனவே மதுபான விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள சரக்குகள் விலை உயர்த்தப்படவில்லை.

இந்த விலை உயர்வு இனிமேல் புதிதாக கொள்முதல் செய்யப்படும் சரக்குகளுக்குத்தான் விலை உயர்கிறது. இதனால் இருப்பில் உள்ள சரக்குகள் ஒரு சில நாட்கள் விற்பனைக்கு இருக்கும். வரும் 1-ந்தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது.

கலால் வரி, கூடுதல் கலால் வரி விதிப்பால் அரசுக்கு ரூ.117 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என கலால்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.