செய்திகள்

மதுபானம் அருந்திய தொழிலதிபரின் வயிற்றில் ஓட்டை போட்ட திரவ நைட்ரஜன்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமான திரவ நைட்ரஜன் இருந்ததால் இரசாயன மாற்றம் ஏற்பட்டு அவர் வயிற்றில் பெரிய ஓட்டை விழுந்ததுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமான திரவ நைட்ரஜன் இருந்ததால் இரசாயன மாற்றம் ஏற்பட்டு அவர் வயிற்றில் பெரிய ஓட்டை விழுந்ததுள்ளது.

வேதிப்பொருளான திரவ நைட்ரஜன் மதுபான கடைகளில் உள்ள கிளாஸ்களை எளிதில் குளிரூட்ட பயன்படுத்தப்படும் பொருளாகும்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அவர் அருந்திய மதுபானத்தில் திரவ நைட்ரஜனின் அளவு அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட வேதியியல் மாற்றத்தில், அவரது வயிற்றில் திடீரென பெரிதாக ஓட்டை விழுந்துள்ளது.

வலியால் அலறித்துடித்த அவரை அருகில் இருந்த கொலம்பியா ஆசிய மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் ஓட்டை பெரிய அளவில் விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர், அறுவை சிகிச்சை மூலம் வயிற்றின் அடிப்பாகம் அகற்றப்பட்டு செயற்கை முறையில் சிறு குடலை இணைத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர் கோஸ்வாமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கும் வரை காத்திருப்பதாகவும், முடிந்தவரை பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரித்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT