ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கார்வா நகரின் லோஹர்புர்வா பகுதியில் மின்னல் தாக்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்னல் தாக்க்கி 8 பேர் பலியானதை அறிந்த முதல் மந்திரி ரகுபர் தாஸ், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன், பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என அறிவித்தார்.