செய்திகள்

பணம் இல்லாததால் மனைவியின் சடலத்தை சுமந்து சென்றவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

ஒடிசா மாநிலத்தில் ஆம்புலனஸ் கிடைக்காமல் மனைவியின் சடலத்தை சுமந்து சென்று பிரபலமானவர் தற்போது வசதி வாய்ப்புடன் பைக்கில் செல்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மாஜ்கி.

தானா மாஜ்கி கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் இறந்து போன தனது  மனைவியின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது தோளில் சுமந்த படி சுமார் 12 கிலோ மீட்டர் நடந்து சென்றார், இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனைப் பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர், பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார். பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும் பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறது.