செய்திகள்

இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.13,000 தள்ளுபடி: அமேசான் அதிரடி

இந்தியாவில் எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.13,000 தள்ளபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் மூலம் வாங்குவோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய தள்ளுபடி சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதுடெல்லி:

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.13,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா தளத்தின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையுடன் எவ்வித கட்டணமும் இன்றி மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வட்டியின்றி, முன்பணம் செலுத்தாமல் மாத தவணை முறையை பெற முடியும். 

புதிய தள்ளுபடி சலுகை ஐஸ் பிளாட்டினம் மற்றும் ஆஸ்ட்ரோ பிளாக் நிற மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. பிரைம் வாடிக்கையாளர்கள் புதிய எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனினை ரூ.38,990 என்ற விலையில் வாங்கிட முடியும். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

எல்ஜி ஜி6 சிறப்பம்சங்கள்:

* 5.7 இன்ச் ஃபுல் விஷன் 1440x2880 பிக்சல் டிஸ்ப்ளே 

* குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் 

* 4 ஜிபி ரேம் 

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 5 எம்பி செல்ஃபிகேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ்

* 3300 எம்ஏஎச் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 

* டால்பி விஷன் வியூவிங் தொழில்நுட்பம் 

* கூகுள் அசிஸ்டண்ட் வசதி

எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் பிப்ரவரியில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் வெளியான எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் ரூ.51,990 விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. மே மாதம் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.