செய்திகள்

லெவல் கிராசிங் மூடல் - மாற்றுப்பாதை ஏற்படுத்தி கொடுக்க கோரிக்கை மனு

திருச்சியில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடிய பாதையை திறக்க கோரியும், மாற்று பாதை அமைத்து தர கோரியும் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருச்சி:

திருச்சி செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், வள்ளுவர் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு அரசியல் கட்சிகள், ரெயில்வே ஊழியர்கள் சார்பில் கடந்த 100 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஆர்.சி.சி. டெப்போ அருகில் பொன்மலை ரெயில் நிலையம் செல்லும் லெவல் கிராசிங் நடைபாதையை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி மாற்று வழி ஏற்படுத்தாமல் அந்த நடைபாதையை மூடிவிட்டது.

இதனால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பாதையை திறக்க கோரியும், மாற்று பாதை அமைத்து தர கோரியும் திருச்சி ஜங்‌ஷன் ரெயில்வே கோட்ட மேலாளரிடம் மனு கொடுக்க அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மனு அளித்துவிட்டு சென்றனர். #tamilnews