வாகனம் மோதி பலியான சிறுத்தைப் புலி. 
செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தைப்புலி பலி - பக்தர்கள் பீதி

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்த சம்பவம் திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி:

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையில் 12-வது வளைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

இந்த பனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று ரோட்டிற்கு வந்தது. சாலையை கடக்க முயன்ற சிறுத்தை புலி மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுத்தைப்புலி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் சிறுத்தைப் புலி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த குட்டி சிறுத்தைப்புலியை மீட்டு சென்றனர்.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்த சம்பவம் திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT