செய்திகள்

ஆஸ்திரேலியா ஓபன்: லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி முன்னேறியுள்ளது. #Australianopen #tennis #LeanderPaes #PuravRaja

மாலை மலர்

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.   இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஜோடி இரண்டாவது சுற்றில் பிரேசிலின் புரோனோ சாரிஸ் - பிரிட்டனின் ஜேமி முரே ஜோடியை எதிர்கொண்டது.

இந்திய ஜோடி 7-6, 5-7, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. டைபிரேக்கரில் முடிந்த போட்டியின் இறுதி செட்டில் மிகவும் சிறப்பாக விளையாடிய புரவ் ராஜா வெற்றி பெற கடைசி புள்ளியை பெற்று தந்தார்.

மூன்றாவது சுற்றில் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி கொலம்பியாவின் ஜுயான் செபஸ்டீன் காபல் - ராபர்ட் பராக் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.  

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் போபண்ணா - பிரான்சின் ரோஜர் ஜோடி, இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ராஜிவ் ராம் ஜோடி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. #Australianopen #tennis #Leander Paes #Purav Raja