செய்திகள்

மத்திய மந்திரி அனந்த குமார் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி- இன்று மாலை தகனம்

மத்திய மந்திரி அனந்த குமார் உடலுக்கு பெங்களூரில் உள்ள பாஜக தலைமையகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP

மாலை மலர்

மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அனந்த குமார் உடல் முப்படை விரர்கள் புடைசூழ மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்துக்கான பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மத்திய மந்திரி சதானந்த கவுடா, அசோகா, ஈஸ்வரப்பா, அனுராக் தாகூர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனந்த குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.