செய்திகள்

ஓட்டேரியில் மனைவி பிரிந்ததால் வக்கீல் தற்கொலை

ஓட்டேரியில் மனைவி பிரிந்து சென்றதால் வக்கீல் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

பெரம்பூர்:

ஓட்டேரி, கொசப்பேட்டை தேவராஜ் தெருவை சேர்ந்தவர் சார்லஸ். ஐகோர்ட்டு வக்கீல். இவரது மனைவி எஸ்மி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக எஸ்மி கடந்த ஓராண்டுக்கு முன்பு சார்லசை பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் சார்லசுக்கு 2 நாட்களாக எஸ்மி போன் செய்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து எஸ்மி வீட்டுக்கு வந்து பார்த்த போது உள்பக்கமாக பூட்டி இருந்தது. மேலும் துர்நாற்றமும் வீசியது. உடனே இது குறித்து அவர் ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற போது சார்லஸ் இறந்து கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.