மரணம் 
செய்திகள்

லாஸ்பேட்டையில் காவலாளி மயங்கி விழுந்து மரணம்

லாஸ்பேட்டையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் புது காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது78). இவர் தனியார் மூலம் லாஸ்பேட்டை பெத்திசெட்டி பேட்டையில் அமைந்துள்ள சமூக நலத்துறையின் அரவணைப்பு இல்லத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிந்த ராஜ் இரவு காவல் பணிக்கு சென்றார். நேற்று காலை பணியில் இருந்த கோவிந்த ராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கோவிந்த ராஜை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் கதிர்காமம்அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கோவிந்தராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவிந்தராஜின் மகன் விநாயகமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.