செய்திகள்

டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: ஓய்வால் முதல் இடத்தை பறிக்கொடுத்தார் விராட் கோலி

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடாத விராட் கோலி முதல் இடத்தை பறிகொடுத்துள்ளார்.

அவர் விளை6யாடாததால் ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த விராட் கோலி 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். இலங்கை தொடருக்கு முன் 824 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தார். மூன்று போட்டிகளில் விளையாடாததால் 48 புள்ளிகள் குறைந்த 776 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் எவின் லெவிஸ் 780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறார். டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பும்ரா, இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் வீழ்த்த முடியாத காரணத்தினாலும், கடைசி போட்டியில் விளையாடாத காரணத்தினாலும் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.