டோமினிகா :
பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டோமினிகாவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 376 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அசார் அலி 127 ரன்னும், பாபர் அசாம் 55 ரன்னும், கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 59 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 51 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டும், ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், தேவேந்திர பிஷோ 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன் எடுத்து இருந்தது.