தொடக்கத்தில் சற்று மெதுவாக விளையாடிய இலங்கை அணி, இறுதியில் இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்தது. இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து பலம் மிக்க அணி என நன்றாக தெரியும். இறுதி கட்டத்தில் ஸ்டோக்ஸ் எப்படி விளையாடுவார் என்பதும் தெரியும். ஐபிஎல், டி20 போட்டிகளில் அவரை கவனித்துள்ளோம்.
இருப்பினும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சரியாக ப்ளான் செய்து பந்தை வீசினோம். அவருக்கு அதிகமாக ரன்களை கொடுக்காமல் அழுத்தத்தை ஏற்படுத்தினோம்.
எங்கள் ப்ளானை சரியாக செய்து ஜெயித்தோம். பந்துகளை பல்வேறு விதமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இறுதியில் போட்டி எங்களுக்கு சாதமாகிவிட்டது. இப்போது இந்த வெற்றி எங்கள் அணி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.