புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கை பிரதமரான மகிந்த ராஜபக்சே பிப்ரவரி மாதம் 7ம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவர் அவர் 11-ம் தேதி இலங்கை புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் வாரணாசி, சாரநாத், புத்த கயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது பயணத்தின்போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை பிரதமராக பதவியேற்றபின், மகிந்த ராஜபக்சே இந்தியா வர இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.