செய்திகள்

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இந்தியா வருகை

உள்நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லி:

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் நிகழ்ந்த மோதலின் எதிரொலியாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் துவக்க நாடுகளின் சார்பில் புதுடெல்லியில் நாளை நடைபெறும் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று இந்தியா வந்தடைந்தார்.

இந்த மாநாட்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். #tamilnews

SCROLL FOR NEXT