செய்திகள்

திருக்கோவிலூர் அருகே நிலத்தகராறில் கோஷ்டி மோதல்- 10 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர் அருகே நிலத்தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி பரிமளா (வயது 26) ஆகியோருக்குமிடையே நிலம் பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் சம்பவத்தன்றும் இது தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் தனது ஆதரவாளர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டனர்.

ரமேஷ், மணிகண்டன், பரிமளா, மல்லிகா மற்றும் அன்னக்கிளி ஆகியோர் ஒரு பிரிவாகவும், சுரேஷ், கங்காதேவி, திருமலை, பன்னீர்செல்வம் மற்றும் அய்யனார் ஒரு பிரிவாகவும் சேர்ந்து சண்டைபோட்டுக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலபந்தல் போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீதும், பரிமாளா உள்ளிட்ட 5 பேர் மீதும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT