செய்திகள்

லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் திருமணம் - மணமக்களை நேரில் சென்று வாழ்த்திய நிதிஷ்குமார்

லாலுபிரசாதின் மகன் தேஜ் பிரதாப் திருமணத்துக்கு நேரில் சென்ற முதல் மந்திரி நிதிஷ்குமார் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். #LaluPrasad #Tejpratap #Nitishkumar

பாட்னா:

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் லாலுபிரசாத் யாதவ். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற இவர் சிறையில் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். முன்னாள் துணை முதல் மந்திரியாக இருந்தார்.

இதற்கிடையே, தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் பீகாரின் முன்னாள் மந்திரி சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய் திருமணம் இன்று நடைபெற்றது. 

இந்நிலையில், லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் திருமணத்துக்கு நேரில் சென்ற முதல் மந்திரி நிதிஷ்குமார் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த திருமணத்தில் பீகார் ஆளுனர் சத்யபால் மாலிக், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், முதல் மந்திரி  நிதிஷ்குமார், மூத்த தலைவர் சரத் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்பட பலர் பங்கேற்றனர். #LaluPrasad #Tejpratap #Nitishkumar

SCROLL FOR NEXT