செய்திகள்

லாலு மகன் நிச்சயதார்த்தம் - முன்னாள் மந்திரி மகளை மணக்கிறார்

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், முன்னாள் மந்திரியின் மகளுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #Bihar #LaluSon #Tejpratapyadav

பாட்னா:

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற இவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் துணை முதல் மந்திரியாக இருந்தார். இவரது குடும்பத்தினர் தேஜ் பிரதாப்புக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்நிலையில், தேஜ் பிரதாப் யாதவுக்கும், பீகாரின் முன்னாள் மந்திரி மகளுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதுதொடர்பாக, அவரது குடும்பத்தினர் கூறுகையில், தேஜ் பிரதாப் யாதவுக்கும், முன்னாள் மந்திரி சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

இவர்களது திருமணம் மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சுஷில்குமார் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்.

மேலும், இந்த திருமணத்தில் லாலு பிரசாத் யாதவும் பங்கேற்க நீதிமன்றத்தில் அனுமதி கோரவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

#Bihar #LaluSon #Tejpratapyadav #Tamilnews

SCROLL FOR NEXT