ராஞ்சி:
சிறுநீரகம் மற்றும் இதயம் சார்ந்த சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு இன்று ரெயில் மூலம் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது வருகையை எதிர்பார்த்து ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் பலர் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரெயிலில் இருந்து இறக்கப்பட்ட லாலு, சக்கர நாற்காலி மூலம் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ராஞ்சி நகரில் உள்ள ரிம்ஸ் எனப்படும் ராஜேந்திரா அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அங்குள்ள இதயநோய் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Lalu #RIMS