செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் மத்திய மந்திரி பண்ணையில் விபத்து: ஒருவர் பலி

மராட்டிய மாநிலத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பண்ணையில் கொதிகலன் வெடித்த விபத்தில் பிரதீப் ஸ்ரீராம் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மாலை மலர்

நாக்பூர்:

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு மராட்டிய மாநிலம், நாக்பூர் அருகே பண்ணை ஒன்று உள்ளது. அந்தப் பண்ணையில் நேற்று முன்தினம் மஞ்சள் உற்பத்தி பணி நடந்து கொண்டு இருந்தது.

அதற்கான சூளையில் தண்ணீர் கொதிகலனுக்காக விறகு போடுகிற பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தண்ணீர் கொதிகலன் வெடித்தது. அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் 3 பேரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், பிரதீப் ஸ்ரீராம் என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் கல்மேஷ்வர் நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து கல்மேஷ்வர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.