அரச்சலூர்:
அரச்சலூர் அருகே உள்ள விளக்கேத்தி விஜயநகரம் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 45). இவருக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்ததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்தாராம்.
தங்கமுத்து அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வாழை இலை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து அரச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.