கடந்த 2016-17 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்த காரணத்தால் இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த பார்சிலோனா தற்போது இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது.
பார்சிலோனா இந்த சீசனில் இதுவரை 31 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வந்த நிலையில் நேற்று வாலன்சியா அணியை எதிர்கொண்டது. இதில் சுவாரஸ், உமிடிடி ஆகியோர் கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லா லிகா வரலாற்றில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத அணி என்ற வரலாற்றை படைத்துள்ளது. இந்த சீசனில் 32 போட்டிகளிலும், கடந்த சீசனில் கடைசி 7 போட்டிகளிலும் பார்சிலோனா தோல்வியை சந்தித்தது கிடையாது.