ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான 11 கொண்ட அணி வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியில் முன்னணி வீரரான கிலியான் மப்பே இடம்பிடித்துள்ளார்.

மப்பேவிற்கு 19 வயதுதான் ஆகிறது. இதன்மூலம் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் இளம் வயதில் களம் இறங்கிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கால்பந்து ஜாம்பவான் பீலோ 1958-ல் தனது இளம் வயதில் களம் இறங்கியுள்ளார். அதன்பின் இத்தாலி வீரர் பெர்கோமி 1982-ல் தனது இளம் வயதில் களம் இறங்கியுள்ளார்.