சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:
எந்த ஒரு அமைப்பும், யாரும் அரசியலுக்கு வரலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவர்கள் அரசியலுக்கு வந்து கட்சியை தொடங்கும்போது அந்த கட்சிக்கு என்ன கொள்கை? என்ன செயல்முறை? எதை நோக்கி அவர் பயணம் செய்கிறார் என்பதை பொறுத்து தான் மக்களுடைய எதிர்ப்போ, வரவேற்போ இருக்கும்.
எங்களைப் போன்றவர்கள், அரசியலில் மிகப்பெரிய அளவிற்கு வரக்கூடிவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயகத்தையும், மதச்சார்பிமையையும், சமூக நீதியையும், பகுத்தறிவு அடிப்படையில், பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி, ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பை மய்யப்படுத்துவதாக இருந்தால், நிச்சயமாக அதனை வரவேற்போம்.
ரஜினி ஆன்மீக அரசியல் என்று சொல்வது அவருடைய குழப்பத்தை காட்டுகிறது. ஆன்மீகத்தையும் அரசியலையும் சம்பந்தப்படுத்த கூடாது. முதலில் அவருடைய ஆன்மீக அரசியலை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாடு, பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி, இந்தப் பகுத்தறிவின் வேர்களை வெட்டுவதற்கு எந்த சக்திகள் முனைந்தாலும், அந்த சக்திகளை காலூன்றாமல் தடுப்பது எங்களது பணியாக எதிர்காலத்தில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilNews