செய்திகள்

குற்றாலம் ஐந்தருவியில் குளித்த பெண் மூச்சு திணறி பலி

குற்றாலம் ஐந்தருவியில் குளித்த மதுரையை சேர்ந்த பெண் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

தென்காசி:

மதுரையை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வாசுகி (வயது54). இவர்கள் உறவினர்களுடன் குற்றால அருவிகளில் குளிக்க வந்தனர். நேற்று இரவு வாசுகி தனது உறவு பெண்களுடன் ஐந்தருவியில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் அதிகமாக விழுந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், வாசுகியால் உடனடியாக தண்ணீரை விட்டு வெளியே வரமுடியவில்லை.

இதில் மூச்சு திணறிய வாசுகி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வாசுகி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.