கைது 
செய்திகள்

குரங்கணி வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது

குரங்கணி வனப்பகுதியில் தீ வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது, குரங்கணியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 32) என்பவர் வனப்பகுதியில் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர்.