தற்கொலை 
செய்திகள்

குன்னம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குன்னம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி பழனியம்மாள்(வயது 56). இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்து வந்தது. இந்த நோயின் கொடுமை தாங்காமல் மனமுடைந்த பழனியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பழனியம்மாள் மகன் அழகர் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.