தற்கொலை 
செய்திகள்

குன்றத்தூர் அருகே பெயிண்டர் தற்கொலை

குன்றத்தூர் அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 41), பெயிண்டர். மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணேசன் மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் வீட்டில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது மனைவி மற்றும் அக்கம், பக்கத்தினர் தீயை அணைத்து கணேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.