கொலை செய்யப்பட்ட குழந்தைகள் 
செய்திகள்

குன்றத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்ற தாய்

குன்றத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு தாயே வி‌ஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Kundrathur

மாலை மலர்

குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை அகஸ்தீஸ்வர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(30).

சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி(25).

இவர்களுக்கு அஜய்(6) என்ற மகன், காருணிகா(4) என்ற மகள் உள்ளனர். மகன் அஜய் குன்றத்தூரில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.

உடனே முடிக்க வேண்டிய வேலை அதிகம் இருந்ததால், விஜய் நேற்று இரவு வங்கியிலேயே தங்கி விட்டார். இன்று காலை வீடு திரும்பினார்.

வீட்டின் முன்கதவு வெளியே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற விஜய்க்கு அதிர்ச்சி காத்து இருந்தது. குழந்தைகள் 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி படுக்கையில் கிடந்தனர்.

அருகில் சென்று பார்த்த போது, 2 குழந்தைகளும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. குழந்தைகளின் உடல்களை கண்டு விஜய் கதறி அழுதார்.

மனைவியை தேடிய போது வீட்டில் இல்லை. இது குறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

விசாரணையில் விஜய்யின் மனைவி அபிராமி குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு, தப்பி இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

விஜய் குடும்பத்துடன் குடியிருக்கும் மாடி வீடு.

குழந்தைகளுக்கு தாயே வி‌ஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் அவருக்கு வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் மூன்றாம் கட்டளையில் குடியிருந்தார்.

மாயமான அபிராமியை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர். விசாரணையில் அபிராமிக்கும் அருகில் உள்ள பிரியாணி கடை அதிபருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிய வந்துள்ளது.