கைது 
செய்திகள்

குன்றத்தூரில் குட்கா விற்றவர் கைது

குன்றத்தூரில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது நந்தம்பாக்கம், பாரதி நகர் பகுதியில் உள்ள சிறிய கடையில் சுடலைவேல் (வயது 47) என்பவர் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது கடையிலும், வீட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ குட்காவை கைப்பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவருக்கு குட்கா வினியோகம் செய்த நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.