குழந்தைகள் சந்தோஷ், மாதேஷ், சரண்யா ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம். 
செய்திகள்

3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

மனைவி கோபித்து சென்றதால் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளை அடுத்த பாலாகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40) விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மாலதி என்ற மனைவியும் மாதேஷ் (10), சந்தோஷ் (7), சரண்யா (3) என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் மாதேஷ் 6-ம் வகுப்பும், சந்தோஷ் 2-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குடும்ப செலவிற்காக சரவணன் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி மாலதி கணவருடன் கோபித்துக்கொண்டு 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதி மாதா கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மூன்று பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

நேற்று சரவணன் தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி மாலதியிடம் பேசி மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வீட்டிற்கு அழைத்துள்ளார். இதற்கு மாலதி மறுத்து விட்டார். இதனைத்தொடர்ந்து தனது குழந்தைகளுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக கூறி 3 குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

வீட்டிற்கு மூன்று குழந்தைகளையும் அழைத்து சென்ற சரவணன். அங்கு சாப்பிட்டில் வி‌ஷத்தை கலந்து அதை சாப்பாட்டில் ஊற்றி மூன்று குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுத்தார். பின்னர் தானும் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டார்.

கூலித்தொழிலாளி சரவணன்