கல்லூரி விடுமுறை 
செய்திகள்

கும்பகோணம் அரசு கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

கும்பகோணம் அரசு கலை கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், மாணவியை சாதியின் பெயரைச் சுட்டிக் காட்டி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி இரசாயனத்தை குடித்துவிட்டார்.

தற்போது மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி இரசாயனம் குடிக்க காரணமாக இருந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம், அங்கு பயிலும் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.