செய்திகள்

வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - குமாரசாமி நிதியுதவி வழங்கினார்

கர்நாடகாவில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்த முதல் மந்திரி குமாரசாமி இன்று நிதியுதவி வழங்கினார்.

மாலை மலர்

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பிடார் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணா தாலுகா உள்ளது. நேற்று அப்பகுதியில் உள்ள வீடு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பசவ கல்யாணா தாலுகாவுக்கு இன்று சென்றார். அவர் விபத்தில் பலியானோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, நிதியுதவியாக 24 லட்சம் ரூபாய்க்கான காசோலையை குடும்ப தலைவரிடம் வழங்கினார்.