செய்திகள்

புகழ் வாய்ந்த மெரில்போன் கிரிக்கெட் கிளப் தலைவராக குமார் சங்ககரா நியமனம்

தலைசிறந்த கிரிக்கெட் கிளப்பான எம்சிசி-யின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனும் ஆன சங்ககரா நியமிக்கப்பட்டுள்ளார். #MCC

மாலை மலர்

இந்த கிளப்பிற்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேனும் ஆன குமார் சங்ககரா தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். அக்டோபர் 1-ல் இருந்து ஒரு வருடம் இந்த பதவியில் இருப்பார்.

இங்கிலாந்தை தவிர்த்து வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் எம்சிசி-யின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.