40 நாள் கடும் தவம் இருந்து காளிவேடம் அணிவது மிகவும் பக்தி உள்ளதாகும். அம்மன், சத்தி, லட்சுமி, பார்வதி, பரமசிவன், கிருஷ்ணர், நாரதர், ராமர், அனுமான், ராவணன், பஞ்சபாண்டவர் கள், துரியோதனன், முருகன், கணபதி, சுடலைமாடன், இசக்கி, பிரம்மா, கர்ணன், கும்பகர்ணன், சரஸ்வதி, சாமியார்கள், குறவர்கள் கூட்டம், ராஜா-ராணி உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்கள் தயாரிப்பு பணி உடன்குடி பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதே போல புராண காலத்தில் மற்றும் சரித்திர காலத்தில் உள்ளவர்கள் அணியும் தலை கிரீடம், இடுப்பு ஒட்டியானம், வாள், கத்தி, ஈட்டி, திரிசூலம், கண்மலர், வாய்கொடுவா பல், கை கால்களை சுற்றி அணியும் கவசம்,மார்பு கவசம், எதிரியின் தாக்குதலை தடுக்கும் தடுப்பு கவசம் ஆகியன செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டுள்ளனர்.
விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வேடபொருட்கள்.
இதை தவிர குரங்கு, கரடி, கிளி, புலி என பல்வேறு வகையான பறவைகள், மிருகங்கள், பேய் மனிதன், எலும்பு கூடு, டாக்டர், நர்சு மற்றும் இளம்பெண்கள் முதல் முதுமையான பெண்கள் வரை மேலும் பலவகையான 1000-க்கு மேற்பட்ட விதவிதமான வேட பொருட்களும் தயாரிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேடம் அணியும் பக்தர் களின் இடுப்பு அளவு, தலைஅளவு, கை, கால் அளவு ஆகியன தெரிவித்து அதற்கு ஏற்ப தயாரிக்க முன் ஆர்டர் கொடுக்கிறார்கள். இதைப்போல் தங்களது ஊர்பெயரில் தசரா குழு அமைப்பவர்கள் தசரா குழுசார்பில் தேவையான பொருட்களுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுக்கிறார்கள்.