தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமசை, திருச்செந்தூர் ரெயில் பயணிகள் சங்கத் தலைவர் டி.சிவபால், செயலாளர் எஸ்.மால்மருகன், பொருளாளர் பி.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவில் நடக்கும் தசரா திருவிழா போல, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா புகழ் பெற்றது.
இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.