கைது 
செய்திகள்

குடவாசல் அருகே அரசு பஸ் டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது

குடவாசல் அருகே அரசுபஸ் டிரைவரை மிரட்டிய 2 பேரை போலுசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள வடவேர் கோவில்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குரு, ஆரோக்கிய தாஸ் மகன் ராஜ்குமார். இவர்கள் கோவில் பத்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு அரசு பேருந்து வந்தது. பஸ்சை கண்டியூரை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் ஓட்டி வந்துள்ளார். அப்போது குரு, ராஜ்குமார் ஆகியோர் பஸ்சை மறித்து டிரைவரிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.

இது குறித்து பஸ் டிரைவர் ராஜேந்திரன் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார்சம்பவ இடத்திற்கு சென்று அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT