குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள வடகண்டம் புது தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு(வயசு47). இவர் வடகண்டம் ஆற்றுப்பாலம் அருகே ½ கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வைரக்கண்ணுவை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வைரக்கண்ணு திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.