செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது. #Congress #KSAlagiri

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.

மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. #Congress #KSAlagiri

SCROLL FOR NEXT