கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு, முகளூரு, சின்னதிருப்பதி, வருத்தூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து நீர் திறப்பும் அதிகரித்துள்ளது.
தரைப்பாலத்திற்கு மேல் நீர் செல்வதால் அணைக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு பாயும் 5 மாவட்டங்களிலும், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றைக் கடக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.