சமூக விலகல் (கோப்பு படம்) 
செய்திகள்

சமூக விலகலை கடைப்பிடிக்காததால் கிருஷ்ணகிரி காய்கறி சந்தை மூடல்

மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காததால் கிருஷ்ணகிரி காய்கறி சந்தை மூடப்பட்டது.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும்  பொதுமக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் பலர் இன்னும் அலட்சியமாக இருப்பதை பார்க்க முடிகிறது. 

இந்நிலையில் சமூக விலகலை கடைப்பிடிக்காதால் தமிழகத்தின் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி சந்தை மூடப்பட்டது. கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று காய்கறி சந்தையை ஆய்வு செய்தபோது, மக்கள் கூட்டமாக நின்று காய்கறி வாங்கியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தையை மூடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கொரோனா வைரசின் தீவிரதத்தை உணராமல் உயிருடன் விளையாடக்கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.