ஆரஞ்சு மண்டலம் 
செய்திகள்

2 பெண்களுக்கு கொரோனா- ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த 60 வயது மற்றும் 52 வயது மதிக்கத்தக்க 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 52 வயது பெண்ணின் கணவர் சிகரலப்பள்ளி கிராமம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவிக்கு கொரோனா வந்ததால் அதிர்ச்சி அடைந்த சிகரலப்பள்ளி கிராம மக்கள் தங்களது கிராம எல்லையை மூடி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2-ந் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 3 பேர் ஓசூர் திரும்பினார்கள். இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT